[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Oct.31, 2016 (31/10/2016)
தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்
ராஷ்டிரிய ஏக்தா திவாஸ் (தேசிய ஐக்கிய நாள்)
சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 31 ம் தேதி ராஷ்டிரிய ஏக்தா திவாஸ் என நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
அரசாங்கம் கடந்த ஆண்டு முதல் சர்தார் வல்லபாய் படேல் ஜெயந்தியை ஏக்தா திவாஸ் என அறிவிப்பு செய்துள்ளது.
சர்தார் வல்லபாய் படேல் பற்றி :
இவர் 1947-1949 – ன் போது இந்தியாவுடன் 500 சமஸ்தானங்களை ஒருங்கிணைக்க முக்கிய பங்கு வகித்தார்.
இவர் நவீன அனைத்திந்திய சேவைகளை நிறுவியதன் மூலம் இந்தியாவின் சிவில் ஊழியர்களின் இரட்சகர் என அறியப்படுகிறார்.
இந்த ஆண்டின் கரு : (2016)
இந்த ஆண்டின் கரு “இந்திய ஒருங்கிணைப்பு”.
தலைப்பு : சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்
ஆந்திராவில் உள்ள மீன்பிடி பூனை
ஆந்திரப் பிரதேசத்தின் மச்சிலிப்பட்டினத்திலுள்ள (Machilipatinam) கிழலைகழண்டி (Gilalakalandi) துறைமுகத்தில், மீன்பிடி பூனைகள் (Prionailurus viverrinus) காணப்படுகின்றன.
மீன்பிடி பூனைகள், ஆசிய கடல் மீன் இனங்கள் வாழக்கூடிய மிதமான அடர்ந்த சதுப்புநிலக் காடுகளில் காணப்படுகின்றன.
மீன்பிடிப்பு பூனைகள் பற்றி:
மீன்பிடி பூனை மேற்கு வங்கத்தின் மாநில விலங்கு ஆகும்.
அது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஒரு நடுத்தர அளவிலான காட்டு பூனையாக உள்ளது.
தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்
உலகின் நகரங்கள் நாள்
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ம் நாள், உலகின் நகரங்கள் நாள் என உலகளவில் .அனுசரிக்கப்படுகிறது.
ஆண்டின் தீம்:
இந்த ஆண்டு உட்கரு : “உள்ளீடான நகரங்கள் மற்றும் பகிரப்பட்ட அபிவிருத்தி”.
பின்னணி:
உலக நகரங்கள் நாளின் பொதுவான கருத்து : “சிறந்த நகரமே நல்ல வாழ்க்கை” ஆகும்
இந்த நாள் 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி முதல், நகரமயமாக்கலின் வெற்றியை ஊக்குவிக்கவும் நகரமயமாக்கல் மூலம் விளையும் குறிப்பிட்ட சவால்களை அடையாளம் கண்டறியவும், உலக பொது சபையின் 68/239 தீர்மானம் மூலம் நடைமுறைக்கு வந்தது.
[/vc_column_text][/vc_column][/vc_row]