
[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Tamil Current Affairs June 03, 2017 (03/06/2017)
தலைப்பு : சர்வதேச சமீபத்திய நிகழ்வுகள்
பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க வெளியேறுகிறது
பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார்.
இந்த நடவடிக்கை அமெரிக்க மற்றும் அதன் குடிமக்களை பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என்றார்.
சீனாவிற்கு அடுத்தபடியாக, உலகில் பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுவதில் இரண்டாவது மிகப்பெரிய நாடாக அமெரிக்கா உள்ளது.
இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேற கால அவகாசம் நான்கு ஆண்டுகள் ஆகும். அது முழுமையானதும், அமெரிக்கா ஒரு தனிமையான குழுவில் சேரும்.
சிரியா மற்றும் நிகரகுவா ஆகிய இரண்டு நாடுகளும் இந்த உடன்படிக்கையை நிராகரித்துள்ளது.
டிரம்ப் இந்த ஒப்பந்தத்திற்கு ஏன் எதிராக உள்ளார்?
டிரம்ப், இந்த பாரிஸ் ஒப்பந்தம் நியாயமற்ற முறையில் அமெரிக்காவினை நிலக்கரி துறையில் தடைகளை விதிக்கிறது என்றும் சில நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் மோசமான சூழலில் மாசுபடுத்துவதை அனுமதித்துள்ளது.
பாரிஸ் ஒப்பந்தத்தைப் பற்றி:
2015 ல் கையெழுத்திட்ட பாரிஸ் ஒப்பந்தம், 195 நாடுகளில் கொண்டுள்ளது.
இதனை பற்றி மேலும் அறிந்து கொள்ள @
https://www.tnpsc.academy/tnpsc-current-affairs-tamil-Nov-05-2016
https://www.tnpsc.academy/tnpsc-current-affairs-in-tamil-oct-02-03-2016-0210201603102016
தலைப்பு : உலக அமைப்பு, சமீபத்திய நாட்குறிப்புகள்
உலகின் ஏழை குழந்தைகளில் இந்தியாவில் 31% குழந்தைகள் உள்ளனர்
ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித வள மேம்பாட்டு துறையின் (OPHI) ஒரு புதிய அறிக்கையின்படி, உலகின் “அடிமட்ட நிலை ஏழை“ குழந்தைகளில் 31% குழந்தைகள் இந்தியாவில் வாழ்கின்றனர்.
OPHI என்பது ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதார ஆராய்ச்சி மையமாக உள்ளது.
இது சமீபத்தில் 103 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையிலேயே இந்த ஆய்வு நடத்தியுள்ளது.
ஒரு குழந்தையை அடிமட்ட ஏழை குழந்தை என எவ்வாறு சொல்லப்படுகிறது?
ஒரு “அடிமட்ட ஏழை குழந்தை“ குறைந்த பட்சம் ஒரு பத்து மதிப்பீடுகளில் மூன்றில் பெற்றிருக்க வாய்ப்பில்லை.
இவை வறுமையின் மூன்று பரிமாணங்களாக குழுவாக பிரிக்கப்பட்டுள்ளது : உடல்நலம், கல்வி மற்றும் வாழ்க்கை நிலை.
மேலும் சுகாதார பரிமாணம் ஊட்டச்சத்து, குழந்தை இறப்பு மற்றும் கல்வி போன்ற குறிகாட்டிகளை உள்ளடக்கியுள்ளது.
சமையல் எரிபொருள், மேம்பட்ட சுகாதாரம், பாதுகாப்பான குடிநீர், மின்சாரம், தரையிறக்கம் மற்றும் சொத்துரிமை போன்றவை வாழ்க்கை தரத்தின் குறிகாட்டிகளாக உள்ளன.
இந்தியாவின் செயல்திறன்:
689 மில்லியன் ஏழை குழந்தைகளில் நாடுகளின் அடிப்படையில், நைஜீரியா (8%), எத்தியோப்பியா (7%) மற்றும் பாக்கிஸ்தான் (6%) ஆகிய நாடுகளை தொடர்ந்து இந்தியாவில் 31% முழுமையாக வாழ்கின்றனர்.
மொத்த மக்கட்தொகையின் விகிதாச்சாரமாக பல அடிமட்ட குழந்தைகளின் ஏழைகளின் எண்ணிக்கையில், 103 நாடுகளில் இந்தியா 37 வது இடத்தைப் பிடித்தது.
இந்தியாவின் 217 மில்லியன் (21.7 கோடி) குழந்தைகள், 49.9% அடிமட்ட ஏழைகளாக உள்ளனர்.
_
தலைப்பு: விளையாட்டு மற்றும் சமீபத்திய நிகழ்வுகள்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அதிகாரப்பூர்வமாக ‘WINDIES’ என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பெயர் ‘WINDIES’ என பெயரிடப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அதன் 90 வது ஆண்டு விழாவில் ‘மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்’ என்ற பெயரில் மறுபிரவேசம் செய்துள்ளது.
புதிய பெயர் அணியினை குறிக்கும் வகையில் அனைத்து விளையாட்டிலும் இனி பொருந்தும். மேலும் குழுவாக விளையாடும் விளையாட்டிலும் பயன்படுத்தப்படும்.
_
தலைப்பு : செய்திகளில் நபர்கள், சமீபத்திய நாட்குறிப்புகள்
கவிக்கோ அப்துல் ரஹ்மான் காலமானார்
சென்னையில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் காலமானார்.
அவரை பற்றி:
அப்துல் ரகுமான் தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார்.
அப்துல் ரகுமான் மதுரையில் வைகை ஆற்றின் தென்கரையில் 1937 நவம்பர் 2 ஆம் நாள் பிறந்து ஜூன் 2, 2017 ல் இயற்கை எய்தினார்.
வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர்.
ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
_
தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்
ஆக்ஸிஜன் சிலிண்டர்களைப் பயன்படுத்தாமல் இந்திய இராணுவ அணி எவரெஸ்ட் சிகரத்தை ஏறியுள்ளது
நான்கு இந்திய இராணுவ அதிகாரிகளின் குழு ஆக்ஸிஜன் சிலிண்டர்களைப் பயன்படுத்தாமலே வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளனர்.
துணை ஆக்ஸிஸன் இன்றி உலகின் மிக உயர்ந்த சிகரத்தை அளவிட்ட முதல் அணியாக இக்குழு ஆகிவிட்டது.
4,000 க்கும் அதிகமானோர் இதுவரை 8,848 மீட்டர் உச்சத்தை எட்டியுள்ளனர், இதில் 187 பேர் தனிப்பட்ட முறையில் ஆக்ஸிஜனை இல்லாமல் இதனை செய்துள்ளனர்.
[/vc_column_text][/vc_column][/vc_row]
0 responses on "TNPSC Tamil Current Affairs June 03, 2017"