Site icon TNPSC Academy

TNPSC Tamil Current Affairs Mar 06, 2017

TNPSC Tamil Current Affairs Mar

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy – TNPSC Tamil Current Affairs Mar 06, 2017 (06/03/2017)

 

Download as PDF

தலைப்பு : வரலாறு – பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம்

INS Viraat – ஐஎன்எஸ் விராட் ஓய்வு

மும்பை உலகின் மிகப் பழமையான விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விராட் இந்திய கடற் படையில் இருந்து நேற்று ஓய்வு பெற்றது.

இதன் மூலம் இந்திய கடற்படையில் 30 ஆண்டுகள் சேவை உட்பட அந்தக் கப்பலின் 55 ஆண்டு கால நீண்ட பயணம் முடிவுக்கு வந்தது.

எச்எம்எஸ் ஹெர்மெஸ் என்ற பெயரில் இந்தக் கப்பல் பிரிட்டன் கடற்படையில் பணியாற்றி வந்தது.

1984-ல் இது பிரிட்டன் கடற்படை யில் இருந்து நீக்கப்பட்டது. இதை யடுத்து 1987-ம் ஆண்டு மே 12-ம் தேதி இந்திய கடற்படையில் இணைந்தது.

கடந்த 30 ஆண்டுகளில் இந்தக் கப்பல் தளத்திலிருந்து பல்வேறு வகை விமானங்கள் புறப்பட்டு 22,034 மணிக்கும் மேல் பறந் துள்ளன.

1989-ல் இலங்கையில் இந்திய அமைதிப் படை பணி யிலும் 1999-ல் கார்கில் போரின் போதும் இக்கப்பல் முக்கியப் பங்காற்றியுள்ளது.

நீரில் மட்டு மின்றி நிலத்தில் இருந்து மேற்கொள்ளப்படும் ராணுவ செயல்பாடுகளுக்கும் இக்கப்பல் சிறப்பாக உதவக் கூடியது.

நீர்மூழ்கி கப்பல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடக்கூடியது.

27,800 டன் எடை கொண்ட இக்கப்பல் 11 லட்சம் கி.மீ. பயணம் செய்துள்ளது. உலகை 27 முறை சுற்றிவந்ததற்கு இது சமமாகும்.

கடைசியாக கடந்த ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை நிகழ்ச்சியில் இக்கப்பல் பணியில் ஈடுபடுத்தப் பட்டது.

இக்கப்பல் முழுச் செயல்பாட்டில் இருந்தபோது, 1,500-க்கும் மேற்பட்டோர் பணி யாற்றினர். கடைசி பயணத்துக்குப் பிறகு இவர்களின் எண்ணிக்கை 300-க்கும் கீழ் குறைக்கப்பட்டது.

_

தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்

உயரமான தேசிய கொடி – அட்டாரி வாகா சந்திப்பில் பறக்க விடப்பட்டது

பஞ்சாபில் உள்ள அட்டாரி வாகா சந்திப்பில் நாட்டிலேயே அதிக உயரமுடைய 360 அடி உயர தேசிய கொடி பறக்கவிடப்பட்டிருந்தது.

முன்னதாக, ராஞ்சியில் 293 அடி உயரத்தில் பறக்கவிடப்பட்டதே சாதனையாக இருந்தது.

_

தலைப்பு : வரலாறு – செய்திகளில் தலைசிறந்த இடங்கள், சமீபத்திய நாட்குறிப்பு நிகழ்வுகள்

விஜயவாடா விமான நிலையம் மற்றும் திருப்பதி விமான நிலைய பெயர் மாற்றம்

விஜயவாடா விமான நிலையம் மற்றும் திருப்பதி விமான நிலையங்களின் மறுபெயரிடலுக்கு முன்மொழிவுகளுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒப்புதல் அளித்துள்ளார்.

விமான நிலையங்களின் மாற்று பெயர்:

கண்ணவரத்திலுள்ள விஜயவாடா விமான நிலையம் “நந்தாமுரி தாரகா ராமா ராவ் அமராவதி விமான நிலையம்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனர் மற்றும் புகழ்பெற்ற நடிகர் ராமா ராவ் மற்றும் ஆந்திர புதிய தலைநகரை குறிக்கும் பொருட்டு இப்பெயரிட பட்டுள்ளது.

ரேனிகுண்டா திருப்பதி விமான நிலையம் “ஸ்ரீ வெங்கடேஸ்வரா விமான நிலையம்” என ஆண்டவர் வெங்கடேஸ்வரர் குறிக்கும் பொருட்டு இப்பெயரிட பட்டுள்ளது.

_

தலைப்பு : வரலாறு – செய்திகள், விருதுகள் மற்றும் உயர்ந்த மனிதர்களின் சாதனைகள்

எம் பி வீரேந்திர குமார் அவர்களுக்கு மூர்த்திதேவி விருது

பாரதிய ஞானபீட அமைப்பு மூலம் மலையாள ஆசிரியர் மற்றும் செய்தியாளரான எம் பி வீரேந்திர குமார் (M.P. Virendra Kumar) அவர்களுக்கு “30 வது மூர்த்திதேவி விருது”வழங்கப்பட்டது.

அவரது மலையாளம் புத்தகம் “Hymavathabhoovil” க்காக இவ்விருதிற்கு தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய கலாச்சாரம், புராணம், இலக்கியம் மற்றும் இந்திய மக்கள் சமனான, பள்ளத்தாக்குகள் மற்றும் மலைகளில் பரவியுள்ளனர் போன்ற பண்டைய சுவடுகளை பற்றி சொல்கிறது.

அவர் ஏற்கனவே அதே புத்தகத்திற்காக சாகித்ய அகாடமி விருது வென்றுள்ளார்.

அவரை பற்றி:

குமார் அவர்கள் மலையாள தினசரியான மாத்ருபூமியின் பணிப்பாளர் தலைவர் மற்றும் நிர்வாகர் மற்றும் ஒரு ராஜ்யசபா எம்.பி.

பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (IST)வில் அவர் தலைவராக மூன்று முறை பணியாற்றினார்.

மேலும் தற்போது செய்தி நிறுவனம் ஒரு இயக்குனராக பணியாற்றுகிறார்.

மூர்த்தி தேவி விருது பற்றி:

இந்தியாவில் பாரதிய ஞானபீட அமைப்பு மூலம் வழங்கப்படுகிற வருடாந்திர இலக்கிய விருது மூர்த்திதேவி விருது ஆகும்.

இந்திய தத்துவம் மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை இது வலியுறுத்துகிறது.

[/vc_column_text][vc_column_text]

For more TNPSC Tamil Current Affairs Mar and in English visit : www.tnpsc.academy/current-affairs

Subscribe our Newsletter to get Daily TNPSC Tamil Current Affairs Mar and in English on your Inbox.

 

Read TNPSC Tamil Current Affairs Mar and in English. Download daily TNPSC Tamil Current Affairs Mar and in English.

Monthly compilation of TNPSC Tamil Current Affairs Mar and in English as PDF – https://www.tnpsc.academy/current-affairs/download-tnpsc-current-affairs-compilation-in-pdf/

[/vc_column_text][/vc_column][/vc_row]

Exit mobile version