Site icon TNPSC Academy

TNPSC Tamil Current Affairs May 12, 2017

TNPSC Tamil Current Affairs May

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy TNPSC Tamil Current Affairs May 12, 2017 (12/05/2017)

 

Download as PDF

தலைப்பு : இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

சீனாவின் லுனார் மாளிகை – சந்திரனின் விண்வெளி நோக்கம்

சீனா “Yuegong-1” என்றழைக்கப்டும்  “லூனார் மாளிகை” அதன் விண்வெளி சோதனைகளை தொடங்கியுள்ளது.

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

இந்த பரிசோதனையின் ஒரு பகுதியாக, நான்கு சீன மாணவர்கள் 160 சதுர மீட்டர் (1,720 சதுர அடி) அறையில் நுழைந்துள்ளனர்.

அவர்கள் 200 நாட்களுக்கு அங்கே வாழ இருக்கிறார்கள்.

இந்த ஆர்வலர்கள், ஒரு முழுதாக அடைக்கப்பட்டுள்ள ஆய்வகத்தில் ஒரு நீண்ட கால பயிற்சிக்காக சுய கட்டுப்பாட்டுடன் வெளியுலகிலிருந்து எந்த உட்பொருளும் இல்லாமல் வாழ வேண்டும்.

“லுனார் மாளிகையில்” இரண்டு தாவர வளர்ப்பு தொகுதிகள் மற்றும் ஒரு வாழ்க்கை அறையும் உள்ளன.

42 சதுர மீட்டர் கொண்ட இந்த அறையில் நான்கு படுக்கை அறைகள், ஒரு பொதுவான அறை, ஒரு குளியலறை, ஒரு கழிவு – சுழற்சி அறை மற்றும் விலங்குகள் வளர்ப்பதற்கான அறை ஆகியவை உள்ளன.

தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்

தேசிய தொழில்நுட்ப தினம் – மே 11

மே 11 அன்று இந்தியா முழுவதும் தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்பட்டது.

முக்கிய குறிப்புகள்:

மிகப்பெரிய வெற்றிகரமான சாதனைகளை அடிப்படையாகக் கொண்ட நமது நாட்டின் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை குறிக்கும் பொருட்டு அடல் பிஹாரி வாஜ்பாய் மே 11 அன்று தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவித்தார்.

1999 முதல் ஒவ்வொரு ஆண்டும், தொழில்நுட்ப அபிவிருத்தி வாரியம் (TDB) மூலம் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை கெளரவிக்கவும் இந்நாள் நினைவூட்டப்பட்டு நம் நாட்டினை வெகுவாக முன்னேற்றியுள்ளது.

2017 தேசிய தொழில்நுட்ப தின உட்கரு: “உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சிக்கான தொழில்நுட்பம்”.

_

தலைப்பு : அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

“ஸ்பைடர்’ ஏவுகணை சோதனை வெற்றி

வானில் உள்ள எதிரிகளின் இலக்குகளை தரையிலிருந்து தாக்கவல்ல “ஸ்பைடர்’ ரக ஏவுகணையை இந்திய ராணுவம் வெற்றிகரமாக சோதித்தது.

முக்கிய குறிப்புகள்:

இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட “ஸ்பைடர்’ ரக ஏவுகணையானது வானில் பறக்கும் எதிரிகளின் இலக்குகளை மிக விரைவாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

அதிகபட்சம் 15 கிலோமீட்டர் தொலைவு வரை சென்று இந்த ஏவுகணையால் இலக்கை துல்லியமாக தாக்க முடியும்.

இந்நிலையில், ஒடிஸா மாநிலம் பலாசோரில் இந்த ஏவுகணையை இந்திய ராணுவம் சோதனை செய்தது.

இதற்காக, வானில் சிறிய ரக விமானம் பறக்கவிடப்பட்டது. பின்னர், அங்கு நிறுத்தப்பட்டிருந்த தானியங்கி ஏவுதளத்திலிருந்து “ஸ்பைடர்’ ஏவுகணை இயக்கப்பட்டது.

அப்போது, குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாக அந்த விமானத்தை “ஸ்பைடர்’ ஏவுகணை தாக்கி அழித்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

_

தலைப்பு : விளையாட்டு மற்றும் பதக்கங்கள்

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள்

மே 10 முதல் மே 14 வரை புது தில்லியிலுள்ள கே.டி. ஜாதவ் இன்டூர் ஸ்டேடியத்தில் (KD Jadhav Indoor Stadium), ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2017 தொடங்குகிறது.

இந்த ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் ஈரான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ஜப்பான், கொரியா, சீனா, இந்தியா, மங்கோலியா ஆகிய நாடுகள் பங்கேற்க உள்ளன.

இந்தியாவின் பதக்கங்கள்:

அனில் குமார் (Anil Kumar ) உஸ்பெகிஸ்தானின் முஹமலி ஷாம்சிடினோவ் (Uzbekistan’s Muhammadali Shamsiddinov) – வை தோற்கடித்து கிரேகோ – ரோமானிய 85 கிலோ பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார்.

பெண்களுக்கான 75 கிலோ பிரிவில், ஜோதி (Jyoti) ஜப்பானின் மசகோ ஃபுரூச்சி-யிடம் (Masako Furuichi) அரையிறுதியில் தோற்றதன் மூலம் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

_

தலைப்பு : புதிய நியமனங்கள், செய்திகளில் உள்ள நபர்கள்

பிரான்சின் புதிய இந்திய தூதர் – வினய் மோகன் க்வாட்ரா

பிரான்ஸ் நாட்டின் புதிய தூதுவராக வினய் மோகன் க்வாத்ரா நியமிக்கப்பட்டார்.

பிரான்சில் இமானுவேல் மேக்ரோன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி தேர்தல்களுக்குப் பிறகு, Kwatraவின் இந்த நியமனம் நடைபெற்றுள்ளது.

வினய் மோகன் க்வாத்ரா – Vinay Mohan Kwatra பற்றி:

இவர் ஒரு 1988-பிரிவின் வெளிநாட்டு சேவை அதிகாரி ஆவார்.

இவர் தற்பொழுது ஓய்வு பெரும் மோகன் குமார் அவர்களுக்கு பிறகு இப்பொறுப்பையேற்கிறார்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) போன்ற ஐ.நா. அமைப்புகளுடன் விவரங்களை கையாள்வதில் அவர் அனுபவம் வாய்ந்தவராக உள்ளார்.

மேலும் சீனாவிலும் அமெரிக்காவிலும் இந்திய இராஜாங்க நடவடிக்கைகளில் பணியாற்றினார்.

[/vc_column_text][/vc_column][/vc_row]

Exit mobile version