• No products in the basket.

Current Affairs in Tamil – December 18 2022

Current Affairs in Tamil – December 18 2022

December 18, 2022

தேசிய நிகழ்வுகள்:

NCORD:

  • 17 டிசம்பர் 2022 அன்று கொல்கத்தாவில் 25வது கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார்.
  • மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் முதல்வர்கள், பீகார் துணை முதல்வர் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த அமைச்சர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
  • அந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர், மாவட்ட அளவில் NCORD(Narco Coordination Centre)அமைப்பை உருவாக்குவதை உறுதி செய்யுமாறு முதலமைச்சர்களை வலியுறுத்தினார் மற்றும் நாட்டில் போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வுடன் செயல் படவேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

INS மோர்முகாவ்:

  • அதிநவீன போர்க்கப்பலான மோர்முகாவை இந்தியக் கடற்படையில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் டிசம்பர் 18, 2022 அன்று மும்பையில் நடைபெறும் விழாவில் இந்திய கப்பற்படையுடன் இணைக்கிறார்.
  • இந்திய கடற்படைக்கு ஐ.என்.எஸ் மோர்முகாவ் போர்க்கப்பலானது அதிநவீன ரேடார் மூலம் தரையில் இருந்து புறப்பட்டுச் சென்று வானில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணை வசதியை கொண்டுள்ளது.

 

இந்திய எரிசக்தி வாரம் 2023:

  • இந்திய எரிசக்தி வாரம் 2023, இந்தியாவின் G20 தலைமைத்துவத்தின் போது,“வளர்ச்சி, ஒத்துழைப்பு, மாற்றம்” என்ற தலைப்பின் கீழ், பெங்களூரில் 6-8 பிப்ரவரி 2023 வரை நடைபெறவுள்ளது.
  • மேலும் இந்நிகழ்விற்கான தொடக்க விழா பெங்களூரில் 16 டிசம்பர் 2022 அன்று நடைபெற்றது.
  • இந்தியாவை உலகளாவிய பொருளாதார வளர்ச்சியின் இயந்திரமாகவும், உலகளாவிய நுகர்வுக்கான இயக்கியாகவும் உருவாக்க இவ்விழா ஒரு தனித்துவமான வாய்ப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Article 223:

  • ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக ஏ.கே சிங் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதி ரவி ரஞ்சன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, நீதிபதி ஏ.கே சிங் தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்திய அரசியலமைப்பின் 223-வது பிரிவின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

AIIA:

  • கண்டங்கள் முழுவதும் ஆயுர்வேதத்தை மேம்படுத்தும் முயற்சியில், அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் (AIIA) கியூபாவின் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.
  • ஜெர்மனியின் ரோசன்பெர்க் ஐரோப்பிய ஆயுர்வேத அகாடமி (REAA) உடனான ஒப்பந்தத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு கூட்டுத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல இது நீட்டித்தது.

 

ரஃபேல் விமானங்கள்:

  • அனைத்து 36 ரஃபேல் விமானங்களும் இந்தியாவிற்கு பிரான்சால் வழங்கப்பட்டன, கடைசியாக இன்று (டிசம்பர் 17) தரையிறங்கியது.
  • பிரான்ஸிலிருந்து புறப்பட்ட பிறகு, விமானம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானப்படையின் டேங்கர் விமானத்தில் இருந்து விமானத்திற்கு நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
  • 2016-ம் ஆண்டு 36 ரஃபேல் போர் விமானங்களை இந்தியாவுக்கு 60,000 கோடி ரூபாய்க்கு பாரிஸ் வழங்க இந்தியாவும் பிரான்சும் அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம் செய்து கொண்டன.

 

சிறுபான்மையினர் உரிமைகள் தினம்:

  • இந்தியாவில் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18 அன்று சிறுபான்மையினர் உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • ஐக்கிய நாடுகள் சபை டிசம்பர் 18, 1992 அன்று மத அல்லது மொழியியல் தேசிய அல்லது இன சிறுபான்மையினருக்கு சொந்தமான தனிநபரின் உரிமைகள் பற்றிய அறிக்கையை ஏற்று ஒளிபரப்பியது.
  • 2022 சிறுபான்மையினர் உரிமைகள் தினத்தின் கருப்பொருள் “எல்லாரும் சிறுபான்மையினர் உரிமைகளுக்காக” என்பதாகும்.

 

தமிழக நிகழ்வுகள்:

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை:

  • மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு உலகளாவிய பசுமை மருத்துவமனை அமைப்பு சார்பில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத நீர், மற்றும் மின்சிக்கனத்தை குறைத்ததற்காக பசுமை மருத்துவ மனைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
  • மதுரை அரவிந்த் கண்மருத்துவமனையில் குறைந்தளவில் மின்சாரத்தை பயன்படுத்தும் வகையில் அதிக திறனுள்ள குளிர்சாதன கருவிகள், பம்ப், எல்.இ.டி விளக்கு, மின்விசிறி பயன்படுத்தப்படுகிறது.
  • இதனால் மின் பயன்பாடு 25 முதல் 30 சதவீதம் குறைந்துஉள்ளது. இதனை பாராட்டும் வகையில் உலகளாவிய பசுமை மருத்துவமனை அமைப்பு சார்பில் 2022க்கான விருது வழங்கப்பட்டது.

 

உலக நிகழ்வுகள்:

சிண்டி ஹூக்:

  • பிரிஸ்பேன் 2032 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டு ஏற்பாட்டுக் குழு அமெரிக்க நிர்வாகி சிண்டி ஹூக்கை அதன் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளது.
  • ஆறு மாத காலப்பகுதியில் 50 வேட்பாளர்களுடன் பேசிய பிறகு, ஏற்பாட்டுக் குழு நியமனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
  • சிண்டி ஹூக் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் ஆவார், அவர் டெலாய்ட் ஆசியா பசிபிக் நிறுவனத்தை செப்டம்பர் 1, 2018 முதல் மே 31, 2022 வரை வழிநடத்தினார். 2015 முதல் 2018 வரை ஆஸ்திரேலியாவில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார்.

 

சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம்:

  • உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்தோரின் சமூக மற்றும் பொருளாதார உண்மைகளை கவனத்தில் கொள்ள ஆண்டுதோறும் டிசம்பர் 18 அன்று சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • புலம்பெயர்ந்தோரின் உரிமைகள் சமமாக மதிக்கப்படுவதையும், மீறப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.உலகின் விரைவான வளர்ச்சி மற்றும் மாற்றம் இருந்தபோதிலும், மக்களின் நடமாட்டம் இன்னும் பல காரணிகளால் பாதிக்கப்படுகிறது.
  • தற்போது, 281 மில்லியன் தனிநபர்கள் தங்களுடைய சொந்த நாடுகளைத் தவிர வேறு நாடுகளில் வசிக்கும் சர்வதேச புலம்பெயர்ந்தவர்கள்.
  • சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் ஒவ்வொரு நாட்டிலும் புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் சவால்கள் தீர்க்கப்படாமல் இருப்பதை நினைவூட்டுகிறது, மேலும் கொள்கை வகுப்பாளர்கள் சிக்கலைத் தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான மற்றும் விரிவான கொள்கைகளை தொடர்ந்து உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

 

லியோ வராத்கா்:

  • அயா்லாந்து நாட்டின் பிரதமராக, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த லியோ வராத்கா் இரண்டாவது முறையாக மீண்டும் டிசம்பர் 17, 2022 அன்று பதவியேற்கிறார்.
  • தற்போது துணைப் பிரதமராக இருந்து வந்த லியோ வராத்கா், மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்கிறார்.இவர் அயா்லாந்தின் பிரதமராக கடந்த 2017 முதல் 2020 வரை வராத்கா் பொறுப்பு வகித்துள்ளார்.

 

விளையாட்டு நிகழ்வுகள்:

FIFA உலகக் கோப்பை:

  • அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மூன்றாம் முறையாக மெஸ்ஸியின் அர்ஜென்டீனா அணி வெற்றி பெற்றுள்ளது.
  • 36 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது முறையாக, பெனால்டி ஷூட் அவுட் முறையில் அர்ஜென்டீனா அணி, கால்பந்து உலகக்கோப்பையை வென்றது.
  • லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டீனா மற்றும் பிரான்ஸ் அணிகள் FIFA உலகக் கோப்பைக்காக போட்டியிட்டன.
  • கத்தார் வழங்கும் முதல் பரிசுக்கான 347 கோடி ரூபாய் பரிசுத் தொகையுடன், அர்ஜென்டீனா அணி நாடு திரும்புகிறது.லியோனல் மெஸ்ஸியின் கடைசி ஃபீபா உலககோப்பை வெற்றி இது.
  • 1978 மற்றும் 1986ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, அர்ஜென்டீனாஅணி கோப்பையை வென்றது. 4க்கு 2 என்ற கோல் கணக்கில் இந்த வெற்றியை லியோனல் மெஸ்ஸியின் அணி பதிவு செய்தது.

 

ரெஹான் அகமது:

  • பாகிஸ்தானுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இறுதிப் போட்டியில் அறிமுகமான இங்கிலாந்தின் இளம் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ரெஹான் அகமது பெற்றார்.
  • போட்டி தொடங்கும் போது ரெஹான் அகமதுவுக்கு 18 வயது 126 நாட்கள் இருக்கும். இதுவரை, 18 வயது 149 நாட்களே ஆன பிரையன் க்ளோஸ், 1949 இல் நியூசிலாந்து vs இங்கிலாந்து போட்டியின் போது இங்கிலாந்தின் இளைய வீரராக இருந்தார்.

 

 

TNPSC Books

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.