• No products in the basket.

Current Affairs in Tamil – January 1 2023

Current Affairs in Tamil – January 1 2023

January 1, 2023

தேசிய நிகழ்வுகள்:

புதியரூபே ப்ரீபெய்ட்கார்டு:

  • ‘பார்டம் சார்ஜ் மற்றும் டிரைவ்’ என்ற சார்ஜிங் நிலைய நிறுவனம், ‘பைன் லேப்ஸ்’ எனும் நிதி நிறுவனத்துடன் இணைந்து, வாகன சார்ஜிங் வசதிக்காக புதிய ‘ரூபே ப்ரீபெய்ட்’ கார்டை வெளியிட்டுள்ளது.
  • இந்த கார்டை, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சார்ஜிங் நிலையங்களிலும், ஜனவரி 1ம் தேதி முதல் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் மின்சார வாகன வாடிக்கையாளர்கள், இந்த ப்ரீபெய்ட் கார்டை சார்ஜிங் நிலையங்களில் மட்டுமல்லாமல் மால்கள், கடைகள், உணவகங்கள் என பல்வேறு பொது இடங்களிலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

 

 “Lumpi-ProVac” தடுப்பூசி:

  • ஆடு பாக்ஸ் தடுப்பூசி மற்றும் “Lumpi-ProVac” தடுப்பூசி வணிக ரீதியான தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாக்பூரில் 29 டிசம்பர், 2022 அன்று மத்திய மீன்வளத்துறை அமைச்சரும், மகாராஷ்டிர முதலமைச்சரும், துணை முதல்வருமான ஸ்ரீ பர்ஷோத்தம் ரூபாலா முன்னிலையில் கையெழுத்தானது.
  • Lumpi-ProVacind என்பது விலங்குகளின் லம்பி தோல் நோய்க்கு எதிரான நோய்த்தடுப்புக்கு பயன்படுத்தப்படுகிறது, ICAR ஆனது LSDக்கான உள்நாட்டு தடுப்பூசியான Lumpi-ProVac தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளது.

 

வட்டி விகிதம்:

  • தேசிய சேமிப்பு சான்றிதழ்கள், தபால் நிலைய வைப்புத் தொகை உள்ளிட்ட சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை நிதியாண்டின் ஒவ்வொரு காலாண்டிலும் (3 மாதங்கள்) ஒன்றிய நிதி அமைச்சகம் மாற்றி அமைத்து வருகிறது.
  • அதன்படி, நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டான ஜனவரி முதல் மார்ச் வரையிலான சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில்1 சதவீதம் உயர்த்தப்பபட்டிருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
  • தங்கமகள் சேமிப்பு திட்டம், பொது சேமநல நிதி ஆகியவற்றுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை.

 

தமிழக நிகழ்வுகள்:

நடமாடும் பணிமனை:

  • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (31.12.2022) தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை சார்பில் அரசு தானியங்கி பணிமனைகள் இல்லாத இடங்களில் அரசுத் துறை வாகனங்களை ஆய்வு செய்வதற்காகவும், பராமரிப்பதற்காகவும் நடமாடும் பணிமனைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • மதுரை, திண்டுக்கல், தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் ஒரு கோடியே 2 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 7 அரசு நடமாடும் பணிமனைகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.

 

சென்னை சங்கமம்நம்ம ஊரு திருவிழா-2023”:

  • தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறை மற்றும் சுற்றுலாத் துறை இணைந்து நடத்தும் “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா-2023” ஜனவரி 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது.
  • இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.முன்னதாக 2007ஆம் ஆண்டு தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியின் போது, சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
  • தற்போது பத்து ஆண்டுகளுக்கு பிறகு, 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை சங்கமம் நிகழ்ச்சியை சென்னையில் உள்ள பூங்காக்கள், மைதானங்கள், கடற்கரைகள் என 16 இடங்களில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 

RTI:

  • தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையமானது, 14% வரை மட்டுமே கோரப்பட்ட தகவல்களுடன், மிகக்குறைந்த செயல்திறனைக் கொண்டுள்ளது.
  • கேட்கப்பட்ட தகவல்களில் 23% மட்டுமே பகிர்ந்து கொண்ட மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தில் உள்ளது. சதார்க் நாக்ரிக் சங்கதன் மூலம் 2021-22க்கான இந்தியாவில் தகவல் ஆணையத்தின் (ICs) செயல்திறன் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது.

 

உலக நிகழ்வுகள்:

வாங் யி:

  • சீனாவின் வெளியுறவு துறை அமைச்சராக பணியாற்றிய வாங் யி, ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு (பொலிட்பியூரோ) உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இக்குழுவானது சீனாவில் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயா்நிலை அதிகாரக் குழுவாகும்.
  • இதனை அடுத்து தற்போது புதிய வெளியுறவு அமைச்சராக அமெரிக்காவுக்கான அந்நாட்டு தூதராக உள்ள கின் காங் (56) நியமிக்கப்பட்டுள்ளார்.

 

முன்னாள் போப்:

  • முன்னாள் போப் பதினாறாம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக 95 வயதில் அவரது வாடிகன் இல்லத்தில் காலமானார் மேலும் இவர் பதவி விலகி கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் ஆன நிலையில் அவர் காலமானார்.
  • கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக 2005 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்,போப் பதினாறாம் பெனடிக்ட், 1415 ஆம் ஆண்டு கிரிகோரி XII க்குப் பிறகு பதவி விலகும் முதல் போப் ஆவார்.

 

உலகளாவிய குடும்ப தினம்:

  • உலகளாவிய குடும்ப தினம் ஜனவரி 1 அன்று அமைதி மற்றும் பகிர்வு நாளாகக் கொண்டாடப்படுகிறது.
  • 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் உலக அமைதிக்கான முயற்சிகளின் மூலம் உலகளாவிய குடும்ப தினம் உருவானது.
  • உலகத்தை அனைவரும் வாழ சிறந்த இடமாக மாற்றும் வகையில், பூமி ஒரு உலகளாவிய குடும்பம் என்ற கருத்தைக் கருத்தில் கொண்டும் ஊக்குவிப்பதன் மூலமும் ஒன்றிணைந்து, அமைதிச் செய்தியைப் பரப்புவதே இந்த தினத்தின் நோக்கமாகும்.

 

விளையாட்டு நிகழ்வுகள்:

அகில இந்திய சீனியர் ரேங்கிங் பேட்மிண்டன் போட்டி:

  • அகிலேஷ் தாஸ் குப்தா மெமோரியல் அகில இந்திய சீனியர் ரேங்கிங் பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச மாநிலம் பரேய்லியில் டிசம்பர் 23 முதல் 29,2022 வரை நடைபெற்றது.
  • இப்போட்டியில் பெண்கள் பிரிவில் அஷ்மிதா சலிகா வெற்றி பெற்றார். மேலும் ஆண்கள் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் தமிழக வீரர் ரித்விக் சஞ்ஜீவ் தங்க பதக்கம் வென்றார்.
  • 19 வயதான ரித்விக் இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற முதல் தமிழக வீரர் என்ற சிறப்பை பெற்றார்.
 

TNPSC Books

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.